தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – நாளை முதல் அமல்!!



தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – நாளை முதல் அமல்!!

தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு நாளை (மே 16) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

விலை குறைப்பு

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட முக ஸ்டாலின் அவர்கள், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனால் தமிழக அரசின் அறிவிப்பின் படி, இந்த அறிவிப்பு நாளை (மே 16) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் படி ஆவின் நிறுவனம் விநியோகம் செய்து வரும் 5 விதமான பால் பாக்கெட்டுகளுக்கும் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன

அதன் படி ஆவின் பாலின் நீல நிற பாக்கெட்டுகள் லிட்டருக்கு 40 ரூபாயும், அரை லிட்டருக்கு 20 ரூபாயுமாக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஆவின் பச்சை நிற அரை லிட்டர் பாக்கெட்டுகள் 22 ரூபாய்க்கும், ஆரஞ்சு நிற அரை லிட்டர் பாக்கெட்டுகள் 24 ரூபாய்க்கும், இளம் சிவப்பு நிற பாக்கெட்டுகள் அரை லிட்டருக்கு 18.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் டீமோட் எனப்படும் பால் லிட்டருக்கு 57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.



JOIN NOW


அதே போல பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பால் அட்டைதாரர்களுக்கு நீல நிற பாக்கெட்டுகள் லிட்டருக்கு 37 ரூபாயும், அரை லிட்டருக்கு 18.50 ரூபாயுமாக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஆவின் பச்சை நிற அரை லிட்டர் பாக்கெட்டுகள் 21 ரூபாய்க்கும், ஆரஞ்சு நிற அரை லிட்டர் பாக்கெட்டுகள் 23 ரூபாய்க்கும், இளம் சிவப்பு நிற பாக்கெட்டுகள் அரை லிட்டருக்கு 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஆவின் பால் ஒரு 25 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு 300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என ஆவின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post