தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் 

 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது . அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது . குறிப்பாக , மகாராஷ்ட்ரா , கர்நாடகா , கேரளா , உத்திரப்பிரதேசம் , டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது . தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று , பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 30,000 - க்கும் மேல் பதிவாகி வருகிறது . தமிழ்நாட்டில் 13.05.2021 - ஆம் நாள் கணக்கீடுபடி , தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.83 லட்சமாக உள்ளது . 



15.05.2021 to 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன




 . 1. புதிய கட்டுப்பாடுகள்

 • தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி , மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும் . இவற்றில் , ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் ( e - commerce ) மூலம் மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் . மேற்கூறிய மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி , மீன் கடைகள் தவிர , இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது .

 • ATM , பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும் . ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும் . 

3 . பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை , பலசரக்கு , காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும் , மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள் . 



• காய்கறி , பூ , பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது , காய்கறி , பூ பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை 

. • தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை . 



JOIN NOW


• மின் வணிக நிறுவனங்கள் ( e - commerce ) மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும் . இ - பதிவு முறை ( e - Registration )

 • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ - பதிவுமுறை ( e - Registration ) கட்டாயமாக்கப்படும் 

Post a Comment

Previous Post Next Post